விடையேறும்……
பல்லவி
விடையேறும் சிவனுனையே வணங்கித்துதித்தேன்
விடையறியா வாழ்வை எனக்களித்த ஈசனே
துரிதம்
இடைமருதூர் தலத்திலங்கும் சடையோன் தனையே
அடைகலமெனவே தாள் பணிந்தென்றும்
அனுபல்லவி
இடைகுலத்துதித்த கேசவன் நேசனே
விடையோனே வினைதீர்க்கும் நமச்சிவாயனே
சரணம்
விடைத்துத் தாக்கும் இருவினைப் பயனகல
விடைவாகனனுனையே சரணடைந்தேனென்றும்
படைக்கலனாய்த் திரிசூலம் வைத்திருக்குமுனையே
விடையளித்தெனக்கு முக்தி தர வேண்டுமென
No comments:
Post a Comment