லலிதாம்பிகையே உனையே…..
பல்லவி
லலிதாம்பிகையே உனையே துதித்தேன்
பல விதமான வடிவெடுத்தவளே
அனுபல்லவி
அலகிலா விளையாடல் பல புரிந்தவளே
மலைமகளே தாயே கேசவன் சோதரியே
சரணம்
நலந்தருமன்னையே நாராயணியே
குலம் கல்வி செல்வமனைத்துமளிப்ப
சலனமில்லாதவளே சாகம்பரியே
தலையில் பிறையணிந்த தர்மாம்பிகையே
நிலம் நீர் நெருப்பு காற்று வெளியானவளே
உலகெலாம் படைத்தும் காத்துமிருப்பவளே
சலந்தரனையழித்த சிவபெருமான் நாயகியே
தலங்களுள் சிறந்த மீயச்சூர் தலத்துறையும்
No comments:
Post a Comment