மோனத்தவம் செய்யும்……
பல்லவி
மோனத்தவம் செய்யும் முனிவருக்கருள் செய்ய
வானத்தில் தோன்றிய முழுநிலவே உமையே
அனுபல்லவி
ஆனிறை மேய்க்கும் கேசவன் சோதரியே
மான் மழுவேந்திய பரமசிவன் நாயகியே
சரணம்
ஞானியர் மனங்களில் நடமிடுமீச்வரியே
தேனினுமினிய குரலுடைய சங்கரியே
மானைப் பழிக்குமழகு விழியுடையவளே
கானமியற்றியுன் பதம் பணிந்தேன்
No comments:
Post a Comment