பலவிதமாயுனைப் போற்றி…..
பல்லவி
பலவிதமாயுனைப்போற்றிப் பாடிவிட்டேன்
நலமருள்வாய் ஶ்ரீ மகாகணபதியே
அனுபல்லவி
தலங்களுள் சிறந்த பிள்ளையார் பட்டியில்
நலமுடன் கோவில் கொண்டிருக்கும் கரிமுகனே
சரணம்
நிலையிலா உலகில் நிலைத்திருப்பவனே
மலைமகள் தலைமகனே கேசவன் மருகனே
உளமுவந்து துதித்திடுமடியார் படுந்துயர்
இடர்களைக் களைந்திடும் வேழமுகத்தோனே
No comments:
Post a Comment