பார்த்தேன்!ரசித்தேன்!பாடல் புனைந்தேன்!
பனிமலை நாதனை…..
பல்லவி
பனிமலை நாதனை பனிமலையில் கண்டேன்
இனியென் மனக்கவலையனைத்தையும் துறந்தேன்
அனுபல்லவி
வனிதை பார்வதியை இடப்புறம் வைத்திருக்கும்
தனிப்பெருங்கடவுளைக் கேசவன் நேசனை
சரணம்
மனிதரும் மாயாமுனிவரும்
தேவரும்
குனிந்து வணங்கிடுமகிலாண்டேச்வரனை
பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும்
இனிது வணங்கிடுமீசனை சிவனை
No comments:
Post a Comment