கமல மலர்ப் பதம்…..
பல்லவி
கமல மலர்ப் பதம் கனவிலும் மறவேன்
உமை மகனே விநாயகா என்றுமுன்
துரிதம்
அமரேந்திரனுமமரரும் பிரமனும்
நமனும் கணங்களும் நந்தியும் வணங்கிடும்
அனுபல்லவி
அமலன் ஆதிபிரான் கேசவன் மருகனே
குமரேசன் தமையனே குவலயம் காப்பவனே ( உன்)
சரணம்
உமதருள் முதலில் வேண்டிய பின்னரே
கருமங்களனைத்தும் துவங்கிடுமடியார்க்கு
நலமனைத்தும் நல்கிடும் விக்னேச்வரனே
சமமெனத்தனக்கொருவரில்லாதவனே
No comments:
Post a Comment