தர்மாம்பிகையே….
பல்லவி
தர்மாம்பிகையே தர்மசம்வர்த்தனியே
பர்வதவர்த்தனி உன் பதம் பணிந்தேன்
அனுபல்லவி
சர்வலோகநாயகியே கேசவன் சோதரியே
சர்பம்தனை அணிகலானாயணிந்திருப்பவளே
சரணம்
விற்பன்னர்கள் போற்றும் வேதப்பரிபுரையே
சொற்களுக்கும் மனதுக்குமெட்டாத பேரழகே
சி்ற்பரன் ஐயாறப்பன் மனங்கவர் நாயகியே
அற்புதங்கள் பல செய்யும் பொற்கொடியே தாயே
No comments:
Post a Comment