உன்னைத் துதிப்பதன்றி….
பல்லவி
உன்னைத் துதிப்பதன்றி எனக்கென்ன வேலை
அன்னையே அறம் வளர்த்த நாயகியே சரணம்
அனுப்பல்லவி
பொன்னம்பலவாணன் ஐயாரப்பன் துணைவியே
சென்ன கேசவன் சோதரியே மாயே
சரணம்
மின்னல்கள் ஓராயிரம் ஒளியையும் மிஞ்சும்
பன்னகாபரணியே பர்வதவர்தனியே
முன்னும் பின்னுமென முடிவில்லாதவளே
மன்னுபுகழீசன் தன் பாகம் பிரியாளே
No comments:
Post a Comment