எத்தனையோ பாடி விட்டேன்…..
பல்லவி
எத்தனையோ பாடி விட்டேன் ஶ்ரீராமா உனைப்போற்றி
சித்தம் இரங்காததேனோ கேசவனே
அனுபல்லவி
சத்திய சீலனே மரியாதைக்குரிய
உத்தம புருஷனே அயோத்தி மன்னனே
சரணம்
வித்தகர் போற்றும் விழுப்பொருளே ரகுராமா
கத்தும் கடல் நடுவே கிடந்துறங்கும் திருமாலே
பத்து தலை ராவணனின் கதை முடித்த ஜெயராமா
எத்திசையும் புகழ் விளங்கும் ஆராவமுதே
No comments:
Post a Comment