உமையும் உமையொருபாகனும்…..
பல்லவி
உமையும் உமையொருபாகனும்
எமைக்காக்க வேண்டுமென இணையடி பணிந்தேன்
அனுபல்லவி
நமை வழிநடத்தும் சென்னகேசவனும்
அமைதியுடனவன் மார்பிலுறை திருமகளும்
சரணம்
சுமையான இவ்வாழ்வு சுகமுடன் கழிந்திடவும்
இமைப்பொழுதும் இறையுணர்வு நீங்காதிருந்திடவும்
சமய நெறி வாழுவாமல் நாம் வாழ்ந்திடவும்
இமவான் மகளும் கயிலாய நாதனுமான
No comments:
Post a Comment