விக்கினங்கள் தீர்க்கும்…..
பல்லவி
விக்கினங்கள் தீர்க்கும் விநாயகனே துதித்தேன்
அக்கறையுடனே எனைக் காக்க வேண்டுமென
அனுபல்லவி
சக்கரக்கையன் கேசவன் மருகனே
சிக்கல் சிங்கார வேலன் தமையனே
சரணம்
முக்கனியுடனே பாக்கு வெற்றிலையும்
பக்குவமான பழங்களும் தேங்காயும்
சக்கரைப் பொங்கலுமப்பமவல் பொரியும்
தட்சணையுடன் படைத்தே தாளினைப் பணிந்து
No comments:
Post a Comment