மதுராபுரி ராணி…..
பல்லவி
மதுராபுரி ராணி மீனாக்ஷி
இது தகுமோ எனைத்தள்ளலாகுமோ
துரிதம்
சதுர்முகனுமிந்திரனும் அரனரியுமமரர்களும்
குதுகலத்துடனே கரம் பணிந்தேத்தும்
அனுபல்லவி
மதுகைடபரைக் கொன்ற கேசவன் சோதரி
சதுர் மறைகள் புராணங்கள் போற்றும்
சரணம்
முதுமையிலுழலுமெனக்கு மேலும்
புது ப்புது ரோகங்கள் தந்தெனை
வாட்டி வதைக்கலாகுமோ அன்னையே
கதி நீயேயென்றுனைத் துதித்தேன்
नानायॊगिमुनींद्रहृत्सुवसतीं नानार्थसिद्धिप्रदां
नानापुष्पविराजितांघ्रियुगलां नारायणॆनार्चितां।
नादब्रह्ममयीं परात्परतरां नानार्थतत्त्वात्मिकांमीनाक्षीं प्रणतॊस्मि संततमहं कारुण्यवारान्निधिं ॥
யோகிகள், முனிவர்களின் இதயத்தில் நிரந்தரமாக வாசம் செய்பவளே... உன்னை வணங்கும் அடியவர்களின் வாழ்வில் அனைத்து காரியங்களிலும் வெற்றியை தருபவளே...நாராயணனால் பல விதமான மலர்களைக் கொண்டு அர்ச்சிக்கப்படுபவளே...நாத பிரம்மமாக விளங்குபவளே...அனைத்து பொருட்களிலும் உள் இருந்து இயக்குபவளே...கருணை கடலானவளே...பெருகும் செல்வத்திற்கு உரியவளே...உன்னுடைய கருணையை எப்போதும் பெற உன்னை எப்போதும் வணங்குகிறேன்.
No comments:
Post a Comment