அதிசயமேதுமில்லை….
பல்லவி
அதிசயமேதுமில்லை ஶ்ரீராமா உன்னை
துதிக்குமெனக்குன்னருள் தரத்தாமதித்தல்
அனுபல்லவி
எதிரிகளை எளிதில் முறியடிக்கும் கேசவனே
விதிப்படிதானெதுவும் நடக்குமென்றாலும்
சரணம்
கதியென்றுனை நாளும் துதித்த பிரகலாதனையே
அதிகம் சோதித்தப் பின்னரே அபயம் தந்தாய்
துதித்த துருவனுக்கும் பல காலம் கடந்தே
புதியதொரு வாழ்வளித்தாயதனால்
No comments:
Post a Comment