ஸ்ரீ லலிதா ஆவிர்பாவ தினம் ஸ்பெஷல் !
அபிநவ ஸிந்தூராபாமம்ப த்வாம் சிந்தயந்தி யே ஹ்ருதயே
உபரி நிபதந்தி தேஷாமுத்பல நயனாகடாக்ஷ கல்லோலா ||
எவர்கள் தங்களது ஹ்ருதயத்தில் புதிதான குங்குமம் போல்
சிவந்த நிறமுள்ள தங்களை த்யானம் செய்கின்றார்களோ
அந்த பக்தர்களின் பேரில் ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் கடாக்ஷ
அலைகள் எப்போழுதும் விழுந்து கொண்டிருக்கும்..
- ஶ்ரீ லலிதா ஸ்தோத்ர ரத்நம் .
கடல் மகளின்…..
பல்லவி
கடல்மகளின் கருணைக் கடைக்கண்ணருள்
எப்போதும் தப்பாமல் கிடைத்த வண்ணமிருக்கும்
அனுபல்லவி
கடல் வண்ணன் கேசவனின் திருமார்பில் வீற்றிருக்கும்
மடந்தையந்தப் பார்போற்றும் மகாலக்ஷ்மியின்
சரணம்
தங்கள்இதயத்தில் எப்போதும் நினைந்து
குங்குமம் போல் சிவந்த நிறமுள்ள அவளை
தங்கம் போல் மின்னுமெழிலுடையவளை
மங்களம் தருபவளை தினம் துதிப்பவர்க்கு
No comments:
Post a Comment