ஆதிநாதனே பரமேச்வரா…..
பல்லவி
ஆதிநாதனே பரமேச்வரா
பாதி உமைக்கீந்த உனையே துதித்தேன்
அனுபல்லவி
சோதியே சுடரே கேசவன் நேசனே
வேதியரோதிடும் வேதப் பொருளே
சரணம்
பூத கணங்களும் நந்தியும் நால்வரும்
பூதலத்தோரனைவரும் போற்றிக் கொண்டாடும்
நாத வடிவே நமச்சிவாயனே
பாதம் பணிந்தேன் எனக்கருள்வாயென
No comments:
Post a Comment