சங்கரா நாதவடிவானவனே…..
பல்லவி
சங்கரா நாதவடிவானவனே
வேதங்கள் போற்றும் ஓங்கார ரூபனே
அனுபல்லவி
பங்கய நாபன் கேசவன் நேசனே
கங்கையைத்தாங்கும் செஞ்சடாதரனே
சரணம்
திங்கள் பிறைணிந்த மங்களமூர்த்தியே
தங்க நிற மேனியனே தாமரைப் பாதனே
அங்கயற்கண்ணி மலைமகள் நாதனே
பொங்கரவணிந்தவனே புவனேச்வரனே
எங்கும் நிறைந்திருக்கும் ஏழைப்பங்காளனே
செங்கையில் மான் மழுவும் சூலமுமேந்திடும்
கங்காதரனே கயிலாயவாசனே
சங்காபிஷேகம் செய்து நாளுமுனைத்துதித்தேன்
No comments:
Post a Comment