குருவருள்தான்…….
பல்லவி
குருவருள்தான் திருவருளென்றுணர்த்திய முருகனை
திருமால் கேசவன் மருகனைப் பணிந்தேன்
அனுபல்லவி
குருவாகி தந்தைக்கு மந்திரமோதிய
குருபரனை முத்துக்குமரனைக் கார்த்திகேயனை
சரணம்
ஒருமையுடன் அவனிரு திருவடி பணிவோர்க்கு
இருவினை பயன் களையும் சிங்காரவேலனை
ஒரு குறையுமணுகாமலெனைக் காக்கும் குமரனை
திருவாவினன் குடி வளர் பழனியாண்டவனை
No comments:
Post a Comment