Wednesday, 28 February 2024

இமவான் மகளே…..

  

            இமவான் மகளே…..


                 பல்லவி

        இமவான் மகளே உமா மகேச்வரியே

        சமயமிதுவே எனைக் காத்தருளவே

                    அனுபல்லவி

        குமரனையீன்றவளே கேசவன் சோதரியே

        அமரரும் துதித்திடும் பெரிய நாயகியே        

                       சரணம்

         கமல மலரிதழைப் பழிக்கும் வதனம் கொண்ட

         சமமெனத் தனக்கொருவரில்லாதவளே 

         அமரேந்திரனும் அரியயனும் போற்றும்      

         ரமா வாணியே லலிதாம்பிகையே 

         

                    

          

            

 பல்லவி

இமயமலையின் புதல்வியே! காப்பதற்கிது 
நல்ல சமயம். வாராயம்மா. அம்பையே!

அனுபல்லவி
முருகனை யீன்றவளே! உனக்கு ஈடு யார், உலகினில்?
மதிப்பிற்குரியவளே! ஸ்ரீ பெரிய நாயகியே!

சரணம் 1
கமல வதனத்தினளே! விரைவில், நீ
வரங்களருள்வாயென, நான் வேண்டினேன்.
புரமெரித்தோன், அரி, வானோர் தலைவன் போற்றும், பழம்பொருளே!
பராமுகமேனம்மா, தாயே?

சரணம் 2
உமையே! அன்ன நடையினளே! தாமதமா,
காப்பதற்கு? போக்கெவர்? திண்ணமாக, 
எமக்கு, இப்போது, அன்பு காட்ட,
பளுவா? கேளாயம்மா, தயையுடன்.

சரணம் 3
எவ்வமயமும், பணிந்தோருக்கு வரமருள்பவளே! உண்மையான
தொண்டனம்மா. சியாம கிருஷ்ணனின் சோதரி
யன்றோ? (நீ) முறை கேளாயோ? பாவங்களை
அழிப்பவளே! ஸ்ரீ பெரிய நாயகியே!

பெரிய நாயகி - தஞ்சையில் அம்மையின் பெயர்
புரமெரித்தோன் - சிவன்

No comments:

Post a Comment