Monday, 26 February 2024

நித்தியமுனைத் துதித்தேன் …..

                          


                                நித்தியமுனைத் துதித்தேன் …..

                             

                                              பல்லவி

                        நித்தியமுனைத் துதிக்கின்றேன் கண்ணா

                        சத்தியம் நீயல்லது வேறில்லையென்றே

                                           அனுபல்லவி

                        உத்தமனே கேசவனே உனைத்துதிக்காமல்

                        முத்தே உனைப் பாராமல் உயிர் தரிப்பேனோ

                                              சரணம்

                        புத்துயிராம் ஜனனமருளும் ஜனார்த்தனா

                        இத்தரையில் ஜனிக்குமனைவருமுன் பக்தர்களே

                        தத்தித் தவழுமலைகள் நீரலையில் மறைவது போல்

                        சத்தியனே உன் பகத்தியில் நான் கரைய வேண்டும்                  


நித்தியமும்  நினைக்கிறேன்

நினைவெல்லாம்  நீயே தான் !.....,....

உனைப் பாராமல்உனைத் துதிக்காமல்

உயிர் மூச்சு வேண்டுமா ?  ....கண்ணா !.......

ஜனனம் அருளும்ஜனார்த்தனா

ஜனிக்கும் உயிர்களில் உனக்கு 

புதிய பக்தர்கள்தோன்றிவிடுவர் ...........

நீரில் தோன்றும்

நீரலைகள்

நீரிலேயே

மறைவது போல்.,......

உன் பக்தியில்

நான் கரைந்து

மறைய வேண்டும்  ?..........

  ஜிஜி கவிதைகள்.....

No comments:

Post a Comment