விட்டலனுனைப்பாடி……
பல்லவி
விட்டலனுனைப் பாடி மனம் களித்திருந்தேன்
எட்டெழுத்தானே நாரணனே கேசவனே
அனுபல்லவி
எட்ட முடியாத உயரத்தில் நீயிருந்தும்
எட்டிப் பிடித்தேனென் நெஞ்சில் பக்தியினால்
சரணம்
பட்ட துயர் போதாதோ பழவினைகள் தீராதோ
அட்ட புயகரனே அப்ரமேயனே
சுட்ட செங்கல் மீது நிற்கும் பண்டரிநாதனே
மட்டவிழ் மலர் தூவி உனை வேண்டி நின்றேன்
விட்டல விட்டல ஹரி ஹரி விட்டல
விட்டல விட்டல ஹரி ஹரி விட்டல
பாண்டுரங்கா பண்டரிநாதா
ஜெய ஜெய விட்டல ஜெய ஜெய விட்டல
ஜெய ஜெய விட்டல ஜெய ஜெய விட்டல
No comments:
Post a Comment