எத்தனையோ கோயில்கள்……
பல்லவி
எத்தனையோ கோயில்கள் உனக்கிருந்த போதும்
அத்தனையும் விட்டென் மனகோயிலமர்ந்தவளே
அனுபல்லவி
உத்தமியே கேசவன் சோதரியே உமையே
சக்தியே சமயபுரத்தாளே மாரியே
சரணம்
புத்திக்குமறிவுக்கு மெட்டா வேதப்பரிபுரையே
தத்துவப் பொருளே மாமுனிவர் போற்றும்
நித்திலமே தித்திக்கும் நாமங்களுடையவளே
எத்திசையும் புகழ் விளங்கும் திரிபுரசுந்தரியே
No comments:
Post a Comment