கமலமலரமர் கமலமே……..
பல்லவி
கமல மலரமர் கமலமே உனைத்துதித்தேன்
அமலன் கேசவன் திருமார்பிலுறைபவளே
அனுபல்லவி
கமலக்கண்ணுடையவளே காமனைப் படைத்தவளே
கமலமே உடலெனக் கொண்ட கமலகரத்தாளே
சரணம்
அமரரும் அமரேந்திரனும் வணங்கிடும்
கமல பதமுடையவளே கமலவல்லியே
கமலக்காடு பூத்தது போல் காட்சி தருபவளே
கமலநாபனுறை பாற்கடலிலுதித்தவளே
मातर्नमामि कमले कमलायताक्षि
श्रीविष्णुहृत्कमलवासिनि विश्वमातः।
क्षीरोदजे कमलकोमलगर्भगौरि
लक्ष्मि प्रसीद सततं नमतां शरण्ये॥१६॥
ஸ்ரீ பெருந்தேவி தாயார் திருவடிகளே சரணம் ... !!!
மாதர் நமாமி கமலே கமலாயதாக்ஷி
ஸ்ரீ விஷ்ணு ஹ்ருத் கமலவாஸிநீ விச்வமாத: |
க்ஷீரோத3யே கமலகோமள கர்ப்ப4கௌ3ரி
லக்ஷ்மீ ப்ரஸீத ஸததம் நமதாம் ச’ரண்யே ||
.தாமரைப்பூவினில் வசிப்பவளே! தாமரைக் கண்களை உடையவளே! விஷ்ணுவின் இதயத்தைத் தன் இருப்பிடமாகக் கொண்டவளே! உலகின் தாயே! பாற்கடலில் உதித்தவளே! தாமரைப் பூவினை ஒத்த மென்மையான சரீரம் உடையவளே! உன்னை வணங்குபவர்களை ரட்சிப்பவளே! மகாலட்சுமி தாயே! நீ என்றும் எம்மை அனுக்ரஹிப்பாயாகுக! உன்னை நான் நமஸ்கரிக்கின்றேன்.
No comments:
Post a Comment