கண் கண்ட தெய்வமே…..
பல்லவி
கண் கண்ட தெய்வமே காமாக்ஷி
மண்ணிலுனைப் போல் தெய்வம் வேறில்லை
துரிதம்
விண்ணவரும் மண்ணவரும் சுகசனகாதியரும்
அரனயனரியும் கரம் பணிந்தேத்தும்
அனுபல்லவி
வெண்ணிலவுப் பிறையணிந்த கேசவன் சோதரி
புண்ணியம் செய்தவர்க்கே காட்சி தருமன்னையே
சரணம்
விண்ணையும் மண்ணையும் பதினான்கு உலகையும்
அண்டசராசரங்களனைத்தையுமாள்பவளே
பெண்ணணங்கே காம கோட்டம் தனிலுறைபவளே
எண்ணமெலாம் நீயே திரிபரசுந்தரியே
No comments:
Post a Comment