கஞ்சனூர் அம்பிகையை…..
பல்லவி
கஞ்சனூர் அம்பிகையைத் தஞ்சமடைந்தேன்
அஞ்சேலென்று அபய கரம் நீட்டும்
அனுபல்லவி
கஞ்சனைக் காய்ந்த கேசவன் சோதரியை
நஞ்சுண்ட கண்டன் அக்னீச்வரன் நாயகியை
சரணம்
வெஞ்சமரிலரக்கன் பண்டனை மாய்த்தவளை
அஞ்சனம் தீட்டிய அழகு விழியுடையாளை
அஞ்சம்பும் கரும்பு வில்லுமேந்திய காரிகையை
கொஞ்சும் மொழி பேசும் கற்பகாம்பிகையை
No comments:
Post a Comment