கதி நீயே…..
பல்லவி
கதி நீயே கதி நீயே ஶ்ரீரகு ராமா
மதி முகத்தோனே மாதவனே கேசவனே
அனுபல்லவி
விதியையும் வெல்லும் வழியளி்ப்பவனே
இதிகாச புராணங்கள் மறை போற்றும் நாயகனே
சரணம்
அன்னை தந்தையோ மனைவி மக்களோ
இன்னுமுத்தியோகமோ பணியாளர்களோ
என்னுடைய பந்துக்களோ தரவியலாத
நன்னலமும் மன நிம்மதியும் தருபவனே
கன்ம வினையால் கட்டுண்டு பலப்பல
வன்மமுள்ள தீச்செயல்கள் புரிந்தேன்
தன்னலம் கொண்டு தவறுகள் செய்தேன்
இன்னலிடர் நீங்க உனைச்சரணடைந்தேன்
No comments:
Post a Comment