நீயின்றி ……
பல்லவி
நீயின்றி ஓரணுவுமசையுமோ
தாயே திரிபுரசந்தரி உனைத் துதித்தேன்
அனுபல்லவி
மாயே மரகதமே கேசவன் சோதரியே
மாயா உலகின் சர்வாதிகாரியே
சரணம்
ஆயிரம் மலர் கொண்டு அர்ச்சிக்க வேண்டாம்
நேயமுடனவளை மனத்துள்ளே நினைந்து
தூய மனத்தோடு ஒரு மலர் தந்தால் போதும்
தாயவள் தயாபரி தன்னையே தருவாள்
No comments:
Post a Comment