அன்னபூரணியே விசாலாக்ஷியே……
பல்லவி
அன்னபூரணியே விசாலாக்ஷியே
உன்னைப் பணிந்தோர்க்கு உன்னதம் தருபவளே
அனுபல்லவி
மின்னுமழகுடைய கேசவன் சோதரியே
அன்னமனைவருக்குமளித்திடுமீச்வரியே
சரணம்
பன்னகாபரணனும் பன்னகசயனனும்
உன்னருளாலன்றோ இயங்குகின்றனர்
தன்னிகரில்லாத தனிப்பெருந்தேவியே
புன்னகை முகத்தாளே புவனேச்வரி நீயே
மன்னுபுகழ் மரகதவல்லியே மலைமகளே
பொன் கிண்ணம் தனிலன்னமேந்திய தேவியே
இன்னமுதே கன்னலே இயற்கைப் பொருளே
உன்னருளில்லையேல் உலகமியங்குமோ
No comments:
Post a Comment