பாயும் நதி சூடும்…..
பல்லவி
பாயும் நதி சூடும் பரமசிவன் நாயகியே
தாயுனையே வணங்கித் தஞ்சமடைந்தேன்
அனுபல்லவி
ஆயர் குலத்துதித்த கேசவன் சோதரியே
மாய விளையாட்டில் மனமகிழும் மாதவியே
சரணம்
மாயை நானறிய எனக்குதவி செய்வாயோ
தூயவளே துணை நீயே திரிபுரசுந்தரியே
சேயெனவே நினைந்து தினமுனைத் துதித்தேன்
ஓயா தழைக்கின்றேன் உமையே இரங்காயோ
மாயா விளையாட்டில் மகிழும் மாதவியே!
மாயம் ஏதும் அறியா எனக்குதவாயோ?
பாயும் நதி சூடும் பரமன் நாயகியே!
ஓயா தழைக்கின்றேன் உமையே இரங்காயோ?
No comments:
Post a Comment