திருக்கதவில் பல உருவில்….
பல்லவி
திருக்கதவில் பல உருவில் காட்சி தரும் மாரியே (உன்)
அருட் கதவைத் திறந்தெனக்கு அருள் புரியலாகாதா
துரிதம்
கருமாரி காமாக்ஷி நீலாயதாக்ஷி
மீனாக்ஷி விசாலாக்ஷி அனைத்தும் நீயே
அனுபல்லவி
திருமால் கேசவன் சோதரியே முத்துமாரி
இருவினைப் பயனகல உனையே துதித்தேன்
சரணம்
கருவிலுருவாக சிவபெருமான் நாயகியே
இருள் நீங்கி என் மனம் ஒளியுறச்செய்வாயே
ஒருமையுடன் உனது மலரடியே பணிந்தேன்
பெருமைக்குரிய சமயபுரம் திருத்தலத்தில்
No comments:
Post a Comment