தோடுடைய செவியனை……
பல்லவி
தோடுடைய செவியனைப் பாடி மகிழ்ந்தேன்
காடுடைய சுடலைப்பொடியணிந்த நமச்சிவாயனை
அனுபல்லவி
மாடுகள் மேய்த்த கேசவன் நேசனை
ஆடும் தில்லைச் சிதம்பரநாதனை
சரணம்
ஓடுதனையேந்தும் கபாலீச்வரனை
நாடும் பக்தருக்கு நலமளிக்குமீசனை
தேடும் அடி முடிக்கு சொந்தமான சிவனை
வீடு பேரளித்தெனையாண்டருள வேண்டியே
No comments:
Post a Comment