கதி நீயே தாயே……
பல்லவி
கதி நீயே தாயே திருவென்னும் பெயராளே
பதி கேசவனின் திருமார்பிலுறைபவளே
துரிதம்
ரதிபதி சுரபதி பசுபதி ஶ்ரீபதி
சரச்வதியின் பதி துதித்திடு தேவியே
அனுபல்லவி
நிதியளிப்பவளே மதி சோதரியே
விதியையும் மாற்றும் வல்லமை படைத்தவளே
சரணம்
கதிரொளிக்கு நிகரான உனதொளியால்
புதிதான வில்வ மரம் தோற்றுவித்தவளே
அதில் தோன்றும் பழங்களென் துயரங்கள் நீக்கட்டும்
மதிகொடுத்தென் மன இருளினைப் போக்கட்டும்
ஆதித்ய வர்ணே தபஸோதி ஜாதோ
வனஸ்பதி தவ விருக்ஷோத பில்வ
தஸ்ய பலாநி தபஸாநுதந்து
மாயாந்தராயாஸ்ச பாஹ்யா அ லக்ஷ்மீ.
आदित्यवर्णे तपसोऽधिजातो वनस्पतिस्तव वृक्षोऽथ बिल्वः ।
तस्य फलानि तपसानुदन्तु मायान्तरायाश्च बाह्या अलक्ष्मीः ॥६
பொருள்:
சூர்யகந்திக்கு நிகரான தேஜோமயமானவளே!நினதனுக்ரஹத்தாலேயே விருக்ஷராஜன் எனத்தக்க வில்வமரம் உண்டாயிற்று.அம்மரத்தின் பழங்கள் எனது அஞ்ஞான இருளை அகற்றட்டும்.ஐம்புலன்களாலும் உண்டான பாவங்களை நீக்கட்டும்.
ஓ லக்ஷ்மியே, சூரியனைப் போன்ற பிரகாசம் கொண்டவளே, உன்னதமான அந்த மரமே, உனது தவத்தால் (தபஸ்) பில்வப் பிறந்தது. மரத்தின் பழங்கள் என் துன்பங்களையும், அகம் மற்றும் புறம்பான வறுமையையும் விரட்டட்டும்.
No comments:
Post a Comment