அடியாருக்காக…….
பல்லவி
அடியாருக்காக முடிதிருத்தும் நாவிதனாய் மாறிய
நெடியோனைப் பாண்டுரங்கனைத்துதித்தேன்
அனுபல்லவி
கொடிய வல்வினைகள் தீர்க்கும் கேசவனை
அடி மூன்று மண் கேட்டு மாவலியை வென்றவனை
சரணம்
இடியெனத்தாக்கி பல அரக்கர்களைக் கொன்றவனை
நடித்துப் பல லீலைகள் புரிந்த கண்ணனை
ஒடித்து வில் வளைத்து ஜானகியை மணந்தவனை
இடுப்பில் கை வைத்து செங்கல் மீது நிற்பவனை
No comments:
Post a Comment