பிரமனுக்கும் புரியாத…..
பல்லவி
பிரமனுக்கும் புரியாத தத்துவமே ஶ்ரீராமா
அரன் போற்றுமுனது மாயை அறிய தரமோ
அனுபல்லவி
கரன் முரனரக்கரை வதைத்த கேசவனே
பரதெய்வம் நீயே பரந்தாமனும் நீயே
சரணம்
அரவக்கொடியோன் பார்த்தனுக்கன்று
துரியோதனாதியரை அழித்திடச் சொன்னவனே
பரதனதைப் பாவமென்று எடுத்துரைத்தபோது
நர நாராயணனே சிரித்ததை மறுத்தவனே
No comments:
Post a Comment