நடன நாடகப்பிரியனே……
பல்லவி
நடன நாடகப்பிரியனே நமச்சிவாயனே
படமெடுத்த பாம்பணிந்த பன்னகாபரணனே
துரிதம்
நந்தி கணங்கள் நான்முகனிந்திரன்
நரர் சுரர் நாரதரனைவரும் வணங்கிடும்
அனுபல்லவி
குடமாடும் கூத்தன் கேசவன் நேசனே
விடமுண்ட கண்டனே வீதி விடங்கனே
சரணம்
புடமிட்ட பொன்னே செம்பொன் மேனியனே
சுடலைப் பொடியணிந்த சாம்பசதாசிவனே
இடப வாகனனே கங்காதரனே சங்கரனே
ஜடாதரனே ஜலகண்டேச்வரனே
No comments:
Post a Comment