ஶ்ரீ சங்கரனின்…..
பல்லவி
ஶ்ரீ சங்கரனின் பாதம் பணிந்தேன்
வாச மலர் தூவி மனமாரத் துதித்து
அனுபல்லவி
ஈசனவன் கேசவன் நேசன்
ஆசுதோஷி அகிலாண்டேச்வரன்
சரணம்
ஆசா பாசத் தளைகளைக் களைந்திடும்
மாசிலாமணியெனும் தேசுடைய தெய்வம்
கேசமதில் மங்கை கங்கையை சுமப்பவன்
காசினி போற்றும் கபாலீச்வரன்
No comments:
Post a Comment