காழியூர் நகர் வளர்…..
பல்லவி
காழியூர் நகர் வளர் சட்டநாதனை
ஏழிசை வல்லானை சிவனைத் துதித்தேன்
அனுபல்லவி
ஆழி சூழ் கடல் மீதுறங்கும் கேசவன் நேசனை
தோழி உமையவள் மனங்கவரீசனை
சரணம்
நல்லவர் நால்வகை மறையோதுமந்தணர்
வல்லவர் பலர் போற்றும் மலரடியுடையவனை
வில்லாய் மேருவை வளைத்து முப்பரமெரித்தவனை
சொல்லால் பாடி அவனருள் வேண்டி
நல்லார் தீமேவுந் தொழிலார் நால்வேதஞ்
சொல்லார் கேண்மையார் சுடர்பொற் கழலேத்த
வில்லாற் புரஞ்செற்றான் மேவும் பதிபோலுங்
கல்லார் மதில்சூழ்ந்த காழிந் நகர்தானே
நல்லவர்களும், நாள்தோறும் வேள்விகளைச் செய்பவர்களும், நான்கு வேதங்களை ஓதுபவர்களும், அன்புடையவர்களும் ஆகிய அந்தணர்கள், ஒளி பொருந்திய அழகிய தன் திருவடிகளைப் போற்ற, மேருவில்லால் முப்புரங்களை அழித்த சிவபெருமான் எழுந்தருளிய தலம், மலை போன்ற மதில்களால் சூழப்பட்ட சீகாழி நகராகும்.
No comments:
Post a Comment