ஆனந்தமென்றாலும்…..
பல்லவி
ஆனந்தமென்றாலும் சோகமே வந்தாலும்
வானளந்த கேசவனே நீயே எந்தன் துணை
அனுபல்லவி
தேனுந்தன் திருநாமம் கோவிந்தா அதை
நானும் வாயார ஓதியே மகிழ்ந்தேன்
சரணம்
நானிந்த நானிலத்தில் நலமுடன் வாழ்வதெல்லாம்
நீ தந்த வரமே உனதருளே என்றுணர்ந்தே
ஊனந்தம் உயிரந்தமாகும் வரை உனை மறவேன்
தானந்தமில்லாத ஶ்ரீமன் நாராயணனே
No comments:
Post a Comment