Thursday, 1 February 2024

தண்மதி முகத்தாளை…..

 


                            தண்மதி முகத்தாளை…..


                                        பல்லவி

                தண்மதி முகத்தாளைத் தாமரைப் பதத்தாளை

                விண்ணவர் போற்றும் மலைமகளைத் துதித்தேன்

                                    அனுபல்லவி

                வெண்ணிலவின் கலையணிந்த பிறை நுதலுடன் சேர்ந்து

                மண்ணில்  முழுமதியாய்க் காட்சிதரும்

                                         சரணம்

                கண்ணசைவில் கோடி கோடி கற்பனைகள் தருபவளை

                கண்ணாயிரமுடைய இந்திரனும் தேவர்களும்

                அண்ணாமலை சிவனும் பிரமனும் கேசவனும்

                எண்ணிலா முனிவர்களும் கரம் பணிந்தேத்தும்

  

                புண்ணியம் செய்தோர்க்குக் கண்ணெதிரில் காட்சிதரும்

                உண்ணாமுலையென்னும் பெயருடைய உமையவளை

                பெண்ணணங்கைப் பேரெழிலை திரிபுரசுந்தரியை

                பண்ணிசைத்துப்பாடி எனக்கருள வேண்டுமென




        

अष्टमीचन्द्र-विभ्राज-दलिकस्थल-शोभिता ।
मुखचन्द्र-कलङ्काभ-मृगनाभि-विशेषका ॥

No comments:

Post a Comment