எனது சிரசிலுன்….
பல்லவி
எனது சிரசிலுன் சடாரி பதம் வைத்ததால்
புனிதமடைந்தேன் ஶ்ரீராமா உனதருளால்
அனுபல்லவி
உனது பாதுகையேயெனக் கேசவனே
மனதில் நினைத்து உனையே துதித்தேன்
சரணம்
அனவரதமுனையே துதிக்குமடியார்க்கு
உனது திருவடியருள் பெறும் பாக்கியத்தை
தினகர குலத்தோனே சடாரி மூலமாய்
தீர்த்த உன் கருணையை என் சொல்வேன்
No comments:
Post a Comment