திக்கு வேறில்லை…..
பல்லவி
திக்கு வேறில்லை திரிபுரசுந்தரி
பக்குவமில்லாத எனக்கு உனையன்றி
அனுபல்லவி
சக்கரக்கையன் கேசவன் சோதரியே
குக்குடக் கொடியோன் குமரனின் தாயே
சரணம்
பக்தி எதுவும் நான் செய்திலேன்
முக்தி பெறும் வழியும் நானறிந்திலேன்
உக்தி உபாயமெதுவும் நானறியேன்
சக்தி உனையே தினம் துதித்தேன்
உக்கிரமான பவக்கடல் நடுவினில்
சிக்கித் தவிக்கின்றேன் தத்தளிக்கின்றேன்
அக்கரை செல்லவே எந்தன் துணை நீயே
அக்கறையுடனே ஆண்டருள்வாய் தாயே
No comments:
Post a Comment