அனுபவித்தவரெவரோ……..
பல்லவி
அனுபவித்தவரெவரோ ராமா நாமத்தின் சுவையை
முனிவரும் தேவரும் போற்றித் துதித்திடும் நாமத்தின் சுவையை
அனுபல்லவி
அனுமன் இடையறாது பஜித்திடும் நாமம்
புனிதம் தரும் கேசவன் திருநாமம்
சரணம்
மனிதருள் மாணிக்கமெனத் திகழும்
புனிதர் தியாராஜர் தினம் துதித்த நாமம்
வனிதை பார்வதிக்கு சிவனுறைத்த நாமம்
பிறவிப் பெருங்கடலை கடந்திடச் செயும் நாமம்
No comments:
Post a Comment