Tuesday, 13 February 2024

சுந்தரியே தாயே…..

 உஷா அக்கா Usha Muthukrishnan ஒவ்வொரு முறை தர்மாம்பிகைக்கு எழுதும் பாடலைப் பார்க்கும் போதும் அக்கா கிட்ட சொல்வேன்  அம்பிகையை இப்படி கொஞ்சி குலாவி அகமகிழ்ந்து ஆனந்தம் பொங்க தேனாய் எழுதறேளே அக்கா,என்னால் இப்படி எழுத முடியலையே என்று இருக்கு  என்று சொல்வேன். அக்கா எப்பவோ  எழுதிய பாடலை நேற்று என் உடன் பிறவாத சகோதரி, ஸ்ரீ மதி ஐயாறு ராஜேஸ்வரி பாடி அனுப்ப  தேனான வரிகள்  இன்னிசையாய் தேனிசை தென்றலாய் மனதை வருட நெஞ்சம் முழுவதும் அறம் வளர்த்த எனதன்னையை இருத்தி விட்டார்கள் இருவரும். இருவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.

அழகிய சுந்தரி

நீ அதி மதுரமடி தேவி

பழகி பன்னாளில்

அறிந்து கொண்டேன் நானடி

எழில் வடிவழகி நீ

ஏழைக்கருள் நாயகி

ஒழுகு தேன் சுவை நீயடி

ஓங்கார வேலவன் தாயடி

என்றென்றும் நெஞ்சில் நீ தாங்குகிறாய் எனையே

கன்றென தாயாய் உந்தன் 

கனிவிழி கருணையாய் எனை வருட

கண்கண்ட தெய்வமே 

கார் கொண்ட மழை முகிலே

பொன்வண்ண மயில் அழகே என்றென்றும் என் தாயே எனை மறவாய் ஒயிலே


                                             சுந்தரியே தாயே…..


                                                       பல்லவி

                                 சுந்தரியே தாயே அறம் வளர்த்த நாயகியே

                                 எந்தனைக் காத்தருள உன் பதம் பணிந்தேன்

                                                       அனுபல்லவி

                                 உந்தி கமலன் கேசவன் சோதரியே

                                 இந்திரனும் தேவர்களும் மூவரும் பணிந்தேத்தும்

                                                          சரணம்

                                 விந்தையாய்ப்பல லீலைகள் புரிந்தவளே

                                 சந்திர கலையணிந்த எழில் வடிவானவளே

                                 செந்தேனின் சுவையே கார்வண்ண மழை முகிலே

                                 மாமேரு தனிலமர்ந்த மந்திரப் பொருளே


                                 மதுர மொழியாளே  மாணிக்கப் பரலே

                                 சதுர் மறைகள் போற்றும் சாதோதரி நீயே

                                 எதுகை மோனையுள்ள தமிழமுதும் நீயே

                                 துதித்திடும் எனை மனத்துள் வைத்திருப்பவளே


                            

No comments:

Post a Comment