Monday, 5 February 2024

பதுமநாபன் வரதன்……



                                    பதுமநாபன் வரதன்……


                                          பல்லவி

                          பதுமநாபன் வரதன் பதம் பணிந்தேன்

                          மதுரமொழி பேசும் பெருந்தேவியுடனிருக்கும்     

                                         அனுபல்லவி

                           மதுகைடபரெனும் அரக்கரை வதைத்த

                           யது குலத்துதித்த கேசவனவனே

                                           சரணம்

                           அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும்

                           சங்கு சக்கரம் வாள் வில் தண்டேந்திய

                           பங்கய நாபனை செம்பொன் மதிள் சூழ்ந்த

                           வெங்கதிரோனொளி பாயும் அத்திகிரி பதிதனில்

                                        


எம் பற்பநாபனும் என்பின் மனம் பற்றி மன்னிநின்று *

வெம்பொன் கதிரவன் ஆயிரம் மேவிய மெய் உருவாய் *

அம்பொன்கரங்களில் ஐம்படை கொண்டு அஞ்சல் என்று அளிக்கும் *

செம்பொன் திரு மதிள்சூழ் சிந்துராசலச் சேவகனே.

ஸ்ரீபத்மநாபன் – ஸூர்யன் நிறம் – திவ்ய சக்கரம் சங்கு வாள் வில் தண்டு என்னும் பஞ்ச திவ்ய ஆயுதங்கள் - ஸ்தானம் - மனஸ் - புண்ட்ர ஸ்தானம் - பின்புறம்

சிவந்த பொன்னாலாகிய அழகிய மதிள் சூழ்ந்த ஸ்ரீஹஸ்திகிரியில் உள்ள மஹா வீரனான பேரருளாளன்

எம்முடைய பத்ம நாபனுமாகி என்னுடைய பின் பாகத்தையும் மனசையும் பற்றிக் கொண்டு ஸ்திரமாய் நின்று உஷ்ணமான சிவந்த ஆயிரம் ஸூர்யனோடு ஒப்பான திரு மேனி நிறமுடையவனாய்

அழகிய சிவந்த திருக்கைகளில்திவ்ய பஞ்ச ஆயுதங்களைத் தரித்து அஞ்சாதே என்று கூறி ரஷித்து அருள்கிறான். 

பஞ்சாயுதம் பத்மநாபம் ப்ரனமாம்ய க்ரோசிஷம்சீரார் தூப்புல் திருவேங்கடமுடையான் திருவடிகள சரணம்...!

विशुद्धं परं सच्चिदानन्दरूपं
गुणाधारमाधारहीनं वरेण्यम् ।
महान्तं विभान्तं गुहान्तं गुणान्तं
सुखान्तं स्वयं धाम रामं प्रपद्ये ॥ १

No comments:

Post a Comment