ஜய ஜய ஜகதீச சிவா….
பல்லவி
ஜய ஜய ஜகதீச சிவா
தயவளித்தெனையே காத்தருள்வாயே
அனுபல்லவி
புயங்கனே ஈசனே கேசவன் நேசனே
துயரிடர் களைந்திடும் நமச்சிவாயனே
சரணம்
அயனரி அமரர்கள் இந்திரன் பணிந்திடும்
ஐயாறப்பனே பஞ்சநதீசனே
வியந்திடும் வண்ணம் பல விளையாடல் புரிந்த
தயாநிதியே கங்காதரனே
No comments:
Post a Comment