கருடன் மீதேறி…..
பல்லவி
கருடன் மீதேறி பவனி வருமரங்கனை
இரு கண் கொண்டு கண்டு மகிழ்ந்தேன்
அனுபல்லவி
பெருமைக்குரிய திருமால் கேசவனை
திருவரங்கம் தலத்துறையும் பெரிய பெருமாளை
சரணம்
திருமகளின் ஆண்டாளெனும் பெயருடைய
கரி முன்னே அடி வைத்து ஆடி வர
இரு வெள்ளைப் புரவிகள் அலங்காரத்துடன் வர
கருடன் மீதமர்ந்து கம்பீரமாயரங்கன்
பச்சை மஞ்சள் சிவப்புப் பட்டாடையணிந்து
இச்சையுடன் திருமகளைத் தாங்கும் திருமார்பில்
திருவாபரணங்கள் அழகுடன் மிளிர
வரம் தரும் கரத்தில் ரத்தினக்கல் மின்ன
காதணியாய் பதக்கமுடன் வைரக்குழை தொங்க
கஸ்தூரி திலகம் நெற்றிதனில் மின்ன
கரங்களிலழகிய பூச்செண்டு ஏந்தி
தங்கக்குடையின் கீழ் கம்பீரமாயமர்ந்து
" வினதை சிறுவன் சிறகு என்னும்*
மேலாப்பின் கீழ் வருவானை*
அதுபோல வந்தான் நம்பெருமாள் .ரெங்கன் ராஜாதிராஜனாக
உமா என்கிற சரண்யா, ஸ்ரீரங்கம்.
15.02.2024.
படித்துவிட்டு பின்பு போட்டோவை பார்த்து ஒரு நிமிடம் அரங்கனை கண்முன் நிறுத்தி பாருங்கள். அற்புதமாக சேவை தருகிறானா!!