அபிராமி அந்தாதி 92
பதத்தே உருகி, நின் பாதத்திலே மனம் பற்றி, உன்தன்
இதத்தே ஒழுக, அடிமை கொண்டாய், இனி, யான் ஒருவர்
மதத்தே மதி மயங்கேன், அவர் போன வழியும் செல்லேன்
முதல் தேவர் மூவரும் யாவரும் போற்றும்முகிழ் நகையே.
தேவரும் மூவரும்.........
பல்லவி
தேவரும் மூவரும் யாவரும் போற்றும்
ஓவியமே அழகுப் புன்னகை உடையவளே
அனுபல்லவி
தாவியணைத்தெனை வழி நடத்தியுன்
சேவடி நிழல் தந்த கேசவன் சோதரியே
சரணம்
பூவலகில் இனி வேறொரு சமயம்
தேவையில்லை எனக்கு உனதருளாலே
காவலாயிருந்து நீ அடிமை கொண்டபின்
பூவையே வேறொருவர் வழியில் செல்லேன்
No comments:
Post a Comment