அபிராமி அந்தாதி 89
சிறக்கும் கமலத் திருவே. நின்சேவடி சென்னி வைக்கத்
துறக்கம் தரும் நின் துணைவரும் நீயும், துரியம் அற்ற
உறக்கம் தர வந்து, உடம்போடு உயிர் உறவு அற்று அறிவு
மறக்கும் பொழுது, என் முன்னே வரல் வேண்டும் வருந்தியுமே.
கமலமலரமர்......
பல்லவி
கமல மலரமர் கேசவன் சோதரியுன்
கமலபதங்களையென் சிரம் தனில் வைத்தருள்
அனுபல்லவி
அமரருலகினை அருளுமுன் துணைவரும்
உமையே நீயும் நான் மரணிக்கும் தருணம்
சரணம்
சுமை தருமிவ்வுலக பந்தங்கள் நீங்கி
அமைதியுடன் நான் அந்தக்கரணங்களை
சமநிலைப் படுத்தியென் உயிர் பிரியும் நேரம்
இமவான் மகளே நீ காட்சி தந்து
No comments:
Post a Comment