அபிராமி அந்தாதி 72
என் குறை தீரநின்று ஏற்றுகின்றேன், இனி யான் பிறக்கில்,
நின் குறையே அன்றி யார் குறை காண்?-இரு நீள் விசும்பின்
மின் குறை காட்டி மெலிகின்ற நேர் இடை மெல்லியலாய்.-
தன் குறை தீர, எம்கோன் சடை மேல் வைத்த தாமரையே.
விரிந்து பரந்த....
பல்லவி
விரிந்து பரந்த வானத்தில் தோன்றும்
மின்னலை விடவும் சிற்றிடை உடையவளே
அனுபல்லவி
மரித்தபின் பிறந்தால் என்குறை அல்ல அது,
கரியவளே, உன் குறையே,கேசவன் சோதரி
சரணம்
திரிபுரமெரிசெய்த எந்தை ஈசன் தன்
விரித்த சடையுடைய திருமுடி மீது
அவர் குறை தீர பதித்த உன் தாமரைத்
திருவடியை பணிந்தேன் என் குறை களைந்திட
No comments:
Post a Comment