அபிராமி அந்தாதி 47
வாழும்படி ஒன்று கண்டு கொண்டேன், மனத்தே ஒருவர்
வீழும்படி அன்று, விள்ளும்படி அன்று, வேலை நிலம்
ஏழும் பரு வரை எட்டும், எட்டாமல் இரவு பகல்
சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே.
வாழும் வழியொன்று....
பல்லவி
வாழும் வழியொன்று கண்டு கொண்டேன்
ஏழையேனென் மனத்துள் கேசவன் சோதரி
அனுபல்லவி
வாழும் வழியிதனை நேரிழையே அம்பிகையே
கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்
சரணம்
ஆழக்கடலேழும் மாமலைகள் எட்டும்
ஏழுலகும் அதன் அனைத்திற்கும் அப்பாலும்
சூழும் இரவு பகல் நடுவே சுடராக
அழகுடன் ஒளிரும் சுடரே பேரொளியே
No comments:
Post a Comment