அபிராமி அந்தாதி 82
அளி ஆர் கமலத்தில் ஆரணங்கே. அகிலாண்டமும் நின்
ஒளியாக நின்ற ஒளிர் திருமேனியை உள்ளுந்தொறும்,
களி ஆகி, அந்தக்கரணங்கள் விம்மி, கரைபுரண்டு வெளியாய்விடின்,
எங்ஙனே மறப்பேன், நின் விரகினையே?
வண்டுகள்
பல்லவி
வண்டுகள் மொய்க்கும் தாமரை மலரில்
திண்ணமாயமர்ந்திருக்கும் கேசவன் சோதரி
அனுபல்லவி
அண்டங்களனைத்தும் ஒளிவீசக் கண்டேன்
கண்டதனுள் உந்தன் ஒளிர் மேனி கண்டேண்
சரணம்
கண்டதனாலெந்தன் அந்தக் கரணங்கள்
விண்டுரைக்க இயலாத பரவெளியில் கலந்து
கொண்டாடும் வண்ணம் செய்த உன் விந்தையை
பெண்ணே நான் மறப்பது எங்கனம் சொல்வாயே!
No comments:
Post a Comment